இலங்கையில் 28ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தொற்றாளர்களின் எண்ணிக்கை தினசரி 700 முதல் 800 வரை அதிகரிக்கும் பட்சத்தில் சுகாதாரப் பொறிமுறைக்கு அது ஒரு சவாலாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 300-400 கோவிட்-19 தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் குணமடைந்து வெளியேறும் நிலையில் 300-400 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ மனைகளுக்கு வருவது நெரிசல் பிரச்சினையோ திறன் பிரச்சினையோ அல்ல என்றும்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  குறிப்பிட்டுள்ளது.