இந்தோனேசியாவில் கொரோனா தொற்றினால் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்தோனேசியாவின் தவறான சோதனை முறை, தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல் முறைகள் காரணமாக அந்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்திருக்கிறது.

அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 1 மில்லியன்+ என்பதை பல நாட்களுக்கு முன்பே இந்தோனேசியா கடந்திருக்கும் என்பது தொற்றுநோயியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவின்  கொரோனா தடுப்பு மருந்துப் பயன்பாட்டுக்கு  உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து  உக்ரைன் சுகாதாரத் துறை தரப்பில், “உக்ரைன் நாடாளுமன்றம்  கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வரும்  கொரோனா தடுப்பு மருந்து  பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் இது தொடர்பாக வதந்திகளைப் பரப்புகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.