ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செய லாளர் பதவிக்கு உலக உதைபந்தாட்ட குழுவான ஃபிஃபா (FIFA) அமைப்பின் தலைவரை நியமிக்க ட்ரம்ப் விரும்புகிறார் என்று நியூயோர்க் போஸ்ட் பத்திரிகை தெரிவித் துள்ளது.. ஜியானி இன்ஃபான்டினோ “உலகளவில் மதிக்கப்படுபவர் மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் சிறப்புத் திறன் கொண்டவர்” என்று அமெரிக்க அதிபர் கருதுவதாக வெள்ளை மாளிகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் அந்தப் பத்திரிகையிடம் தெரிவித்தன.
இன்ஃபான்டினோவும் ட்ரம்பின் நன்மதிப்பைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் முதல் ‘அமைதிக்கான விருதை’ அவருக்கு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துகீசியரான அன் டோனியோ குட்டரெஸுக்குப் பதிலாக, அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தப் பதவியைப் பெற, 15 உறுப்பினர்களைக் கொண்ட (அதில் ஐந்து பேருக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது) பாதுகாப்பு சபையின் ஆதரவையும், பின்னர் பொதுச் சபையின் ஒப்புதலையும் இன்ஃபான்டினோ பெற வேண்டி யுள்ளது.
2026 உலகக் கோப்பைப் போட்டியில் ட்ரம்ப் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ‘ரெட் கார்டு’ (red card) முடிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான சர்ச்சை யைத் தொடர்ந்து, ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டி னோவை அப்பதவியிலிருந்து மாற்றுவது குறித்து பரி சீலிக்கப்படுவதாக ‘தி கார்டியன்’ (The Guardian) ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.



