மட்டக்களப்புக்கு மாவட்ட அரச அதிபர் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது: பா.அரியநேத்திரன் மு.பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நேற்று (02/11/2026) இடம்பெற்ற மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையில் அத்துமீறி விவசாயம் மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மை வாசிகளை வெளியேற்றுமாறு இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது மாவட்ட அரச அதிபர் ம (மாவட்டச் செயலாளர்) திரு. ஜோன்பிள்ளை அருள்ராஜ் நடந்து கொண்ட விதம் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் அவமதித்த செயலாகவே நோக்கப்படுகிறது என மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில் அந்த போராட்டத்தின்போது மாவட்ட அரச அதிபருக்கு மயிலத்தமடு, மாதவனை அத்துமீறலை நிறுத்தி வெளிமாவட்டத்தவர்களை வெளியேற்றுமாறு கோரும் மகஜரை கையளிக்க உள்ளே செல்வதற்கு பொலிசாரை கொண்டு வாயில் கதவுகளை மூடுமாறு மாவட்ட அரச அதிபர் ஜோன்பிள்ளை அருள்ராஜ் பணித்திருந்தார்.

வாயில் கதவுகள் மூடப்பட்டாலும் உள்ளே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,வைத்தியர் இ.ஶ்ரீநாத் ஆகிய இருவரும் உள்ளே செல்ல முயன்ற போது மாவட்ட அரச அதிபரின் கட்டளையை ஏற்று பொலிசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.

இந்த செயலானது பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்புரிமை அரச அதிபரினால் மீறப்பட்டுள்ளது. இது 1978 ஆம் ஆண்டு இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்புரிமை தெளிவாக கூறபட்டுள்ளது அந்த சிறப்புரிமையை மட்டக்களப்பு அரச அதிபராலும், பொலிசாராலும் மீறப்பட்டுள்ளது.

ஐந்து பிரதிநிதிகளுக்கு மட்டுமே தம்மை சந்திக்க காரியாலயத்தில் அழைத்த மாவட்ட அரச அதிபர் மேச்சல்தரை தொடர்பாக திருப்தியான பதில்களை கூறவில்லை மாறாக அத்துமீறி நெற்செய்கை, பயிர்செய்கை மேற்கொள்ளும் சிங்கள குடியேற்ற வாசிகளின் விவசாயம் செய்த காணிகளில் மாடுகள் மேயவிடாமல் பண்ணையாளர்கள் மாடுகளை மேய்க்கவேண்டும் என்ற தொணியில் கூறியுள்ளார் என அந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
இதேவேளை பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவில் கலந்து கொண்டவர்களின் சிலருடைய பெயர்களையும், போராட்டத்தில் பங்கேற்காத சிலருடைய பெயர்களையும் சுட்டிக்காட்டி நீதிமன்ற தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2010, தொடக்கம் 2026, வரை மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக பல்வேறு விடயங்களுக்காக கவன ஈர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன எந்த ஒரு போராட்டங்களிலும் முன்பு கடமை புரிந்த எந்த ஒரு மாவட்ட அரச அதிபரும் போராட்ட காறர்களை அவமதிக்கவில்லை அவர்களை அழைத்து, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதற்குரிய காரணத்தை பக்குவமாக கேட்டும், மகஜர்களை வாங்கியும், போராட்டம் இடம்பெறும் மக்களுடன் தமது கருத்துக்களை கூறியதுமே வரலாறு.

ஆனால் தற்போது மட்டக்களப்பு அரச அதிபராக கடமை புரியும் அரச அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உரிய மரியாதை வழங்கவில்லை, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்திக்காவிட்டாலும் மாவட்ட செயலக முன் வாயிலில் ஆவது வந்து தமது நியாயப்பாட்டை கேட்கவில்லை.
இது தற்போதைய அநுர அரசின் அசிங்கத்தன்மையை கோடிட்டுக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற வந்த அதிகாரி மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டாலும் அவர்களுடைய கருத்தை கேட்ககூட வரமுடியாமல் உதாசீனம் செய்யும் ஒருவர் எப்படி மக்களுக்காக பணிபுரிவார் என்பதை சிந்திக்கவேண்டும் இது கவலை தரும் விடயம் எனவும் மேலும் கூறினார்.