இந்தியாவில்  கொரோனா உயிரிழப்பு 143% அதிகரிப்பு

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 143% அதிகரித்திருப்பதாக, ஸ்டடீஸ்டா நிறுவனம் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 212,000 ஆக உயர்ந்தள்ளதாக, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த ஏப்ரல் 20 முதல் மே-4 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்திலும் , ஜப்பான் 25% இறப்பு விகிதம் அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதே போன்று, ஈரான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், லத்தீன் அமெரிக்க நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டடீஸ்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.