தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் – ஒன்ராறியோவின் தீா்மானத்துக்கு இலங்கை அரசு கண்டனம்

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்கும் தனிநபர் பிரேரணை கனடா – ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளமைக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்கும் தனிநபர் பிரேரணை கனடா – ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த மே 6-ஆம்திகதி   நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.

இந்த சட்டமூலமாக்கல் மீதான மூன்றாம் வாசிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதனை ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றினர்.

இந்நிலையில், இந்தத் தீா்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.