ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் தாய்லாந்தில் கைது 

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

தாய்லாந்து குடிவரவுப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தாய்லாந்தில் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் விதமாக எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 6,421 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தாய்லாந்து எல்லைகள் மூடப்பட்டிருந்த பொழுது, 14 நாட்கள் தனிமைப்படுத்தலை தவிர்க்க சட்டவிரோதமாக எல்லைக்குள் நுழைந்ததாக  பல வெளிநாட்டினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலை தவிர்க்கும் முயற்சிகள் தாய்லாந்துக்குள் தொற்று பரவும் ஆபத்தை அதிகரிக்கும்”  என்றுள்ளது.