அமெரிக்க அதிபர் தேர்வு விவகாரம் – ட்ரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் வன்முறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்டமான அதிகாரபூர்வ தேர்வாளர் குழு சந்திப்பு இன்று நாடு முழுவதிலும் மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 3ம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மாநிலவாரியாக தேர்வாளர் குழுக்களில் பெரும்பான்மை பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததையடுத்து 4 பேர்  கத்தி குத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அது நேரம் துப்பாக்கி  சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வன்முறை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் முறைகேடு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக டிரம்ப் தரப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.