பதவி விலகுகின்றாரா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைக்கு தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவர் இன்றைக்கோ அல்லது இந்த வாரத்திலோ தனது பதவி விலகலை அறிவிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.