அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ – இழப்பு 800 பில்லியன் டொலர்கள்?

அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரையில் 27,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்கள் அழிவடைந்துள் ளதுடன், 150,000 இற்கு மேற்பட்ட மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல் பகுதியில் உள்ள சன்ரா மொனிகா மற்றும் மலிபு ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பசுபிக் பலிசேட் எனப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத் துக்கள் மிக்க பகுதி தீயினால் கடும் சேதமடைந்துள்ளது.

பசுபிக் பலிசேட் பகுதியில் 75 விகிதமானவை எரிந்துவிட்டதாக அந்த பிரதேசத்தில் வசிப்பவர் தெரி வித்துள்ளார். மிகவும் ஆடம்பர வீடுகளைக் கொண்ட அந்த பிரதேசத்தில் அமெரிக்காவின் செல் வந்தவர்கள், கொலிவூட் திரைப்பட நடிகர்கள், மற்றும் வர்த்தகர்கள் அதிகம் வாழ்ந்துவருகின்றனர்.

2,000 இற்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன. இதுவரையில் 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 7,500 இற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

கடந்த 30 வருடங்களில் இரண்டு முறை களே ஜனவரி மாதத்தில் கலிபோர்னியா பகுதி யில் காட்டுத்தீ ஏற்பட்டிருந்தது. அதிலும் இந்த முறை ஏற்பட்ட தீ மிகவும் பாரதூரமானது. இது காலநிலை மாற்றத்தின் விளைவு என விஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்பட்ட இழப்புக்களின் தற்போதைய மதிப்பு 52 பில்லியன் டொலர்களாக இருந்தாலும் அது 800 பில்லியன் டொலர்களாக இருக்கும் என வெள்ளைமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.