அல்ஜீரியாவில் காட்டுத்  தீ  : 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் பலி

algeria அல்ஜீரியாவில் காட்டுத்  தீ  : 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் பலி

அல்ஜீரியாவில் (Algeria) சுமார் 50-க்கு மேற்பட்ட இடங்களில் பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 இராணுவத்தினர் உட்பட 42 பேர்  தீயில்  சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பெருமளவு வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களும் எரிந்து அழிந்துள்ளன.

இதுதொடர்பாக நேற்று இரவு அரசு தொலைக்காட்சியில்  கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அய்மான் பெனாப்டெர் ரஹ்மானே, இராணுவத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் உட்பட பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021