இலங்கையில் பதிவாகும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும்.
இதேநேரம் ஒன்றுகூடல்கள் மற்றும் சன நெரிசலான பகுதிகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.