மன்னாரில் 5,7626  பேருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது- மருத்துவர் ரி.வினோதன்

IMG 20210811 093116 1 மன்னாரில் 5,7626  பேருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது- மருத்துவர் ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் 57,626  பேருக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி  வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவிக்கையில், “கொரோனா தடுப்பூசி யின் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது  தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மன்னாரில் 57 ஆயிரத்து அறுநூற்று 26 பேருக்கு கொரோனா  முதலாவது தடுப்பூசியாக  ஃபைசர் மற்றும் சினோபாம்  வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை சினோபாம் 2ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தவறியவர்கள் 0232222916 என்னும் தொலைபேசி இலக்கத்தோடு காலை 9 மணி முதல் மாலை 3 முப்பது மணி வரை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இதேவேளை நேற்றைய தினம் 17 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  மன்னாரில் இதுவரையில் 1221 பேரும் இந்த வருடம் 1204 பேரும் இந்த மதம்  180 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள்.

தடுப்பு ஊசி செலுத்தப்பட்டாலும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் மடுமாதா உற்சவத்திற்கு  மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021