கிரேக்க தீவான(Evia) ஈவியாவில் காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. அங்கு பலத்த காற்றும் வீசி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காட்டுத் தீயைத் தொடர்து ஈவியா தீவில் இருந்து ஏற்கனவே 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் 14ம் திகதி ஆரம்பித்த தீ,கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது. இந்த காட்டுத் தீ காரணமாக பலரைக் காணவில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் துருக்கியின் சில பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் பெரும் காடுகள் அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.