காட்டு விலங்கொன்று தாக்கி கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் படுகாயம்

239 Views

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர்இ காட்டு விலங்கு தாக்கியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ் . பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பபிரிவு விரிவுரையாளரான கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டு விடுதிக்கு திரும்பிய வேளைவிலங்கு தாக்கியுள்ளது.அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

இவரை யானை அல்லது கரடி தாக்கியிருக்கவேண்டும் என்று தெரிவிக்கும் பொலிஸார், விசாரணை இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்

 

 

Leave a Reply