மனைவி பிள்ளைகளை காணவில்லை – கணவன் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு

170 Views

IMG 20210812 091016 1 மனைவி பிள்ளைகளை காணவில்லை - கணவன் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – 1 ஆம் ஒழுங்கை – மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி வயது 32 மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4  என்ற தனது மனைவியும், இரு பிள்ளைகளும் கடந்த 2021.08.10 ஆம் திகதி வீட்டில் இருந்துள்ளனர்.

IMG 20210812 091005 மனைவி பிள்ளைகளை காணவில்லை - கணவன் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு

கணவர் அன்று காலை கடையொன்றிற்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி பிள்ளைகளைக் காணவில்லை என கணவனால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காணாமல் போன பெண், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0777111103-0775945839

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply