யாழ்ப்பாணத்தில் மோசமடையும் கொரோனா பரவல்; நேற்றும் நால்வர் மரணம்

159 Views

1628264453 COVID deaths Sri Lanka L 1 e1628489041340 யாழ்ப்பாணத்தில் மோசமடையும் கொரோனா பரவல்; நேற்றும் நால்வர் மரணம்யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும், கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய நகர சபைத் தலைவர் என நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக உயர்வடைந்துள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply