மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு ஒருவர் வைத்தியசாலையில்

132 Views

IMG 20210812 WA0017 மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு ஒருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காவல் துறையினர் சமிக்கையை மீறி சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது காவல் துறையினர் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்த போதும் உழவு இயந்திரம் காவல்துறையினரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் காவல் துறையினர் அதனை துரத்திச் சென்ற நிலையில் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டதை  அடுத்து அதில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல் துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply