எவ்வித அச்சுறுத்தல் வரினும் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் – கஜேந்திரன் எம்.பி

21 Views

எவ்வித அச்சுறுத்தல் வரினும் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என பாராளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரன்  உறுதியளித்துள்ளார். 

இன்றைய தினம் தையிட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

தையிட்டிப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தி  சட்டவிரோதமாக திஸ்ஸரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த விகாரை அமைந்துள்ள தனியாருக்குச் செந்தமான காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தி இரண்டாவது முறையாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தக் கட்டுமானம் ஆரம்பிக்கப்படுகின்ற நேரத்திலேயே இந்த இடத்திற்கு வந்து பார்வையிட முடியாத அளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.  அவ்வாறு இருந்தும் நாம் இத் தகவல்களை அறிந்து 2021 ம் ஆண்டு ஆரம்பத்திலே அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் இக் கட்டுமானங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம்.

அந்த தீர்மானங்களையும் மீறி இக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான குரோரத்தை வளர்க்கும் நோக்கோடு தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடப்  பிரதேசத்திலே  இருந்த தமிழர்களின் தொன்மை அடையாளங்கள் பல படையினரால் முற்றாக அழித்தொழித்து விகாரை அமைப்பது என்பது இந்தப் பிரதேசத்தை  பௌத்த பிரதேசமாக திட்டமிட்டு மாற்றியமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இவ் விகாரை இராணுவத்தால் அவர்களின் தேவைக்காக கட்டப்பட்டுள்ளது. இது சட்டவிரோத விகாரையாக காணப்படுகிறது. இது மதம் சம்பந்தமான பிரச்சினை கிடையாது  ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினை. இங்கு  நாம் போாடுவது பௌத்த மதத்திற்கு எதிரானது அல்ல பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரானதே.

கடந்த 3ம் 4ம் 5ம் திகதிகளில் நீதிமன்ற கட்டளைக்கேற்ப  போராட்டம் நடாத்திய காணியில் போராட்டத்தை நடாத்தியிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸ் அதிகாரி  என்னை தலையிலும் காலிலும் பிடித்து இழுத்து வந்து வெளியில் போட்டார். அந்த நேரத்தில் அவரது சாரதி.காலைப் பிடித்து தூக்கி வந்த தருணம் காலைத் திருகி உடைப்பதற்கு முயற்சி செய்தார்.   அதே நேரம் எமது உறுப்பினர் ச கைது செய்த போது அதனை நான் கானொலியாகப் பதிவு செய்த வேளையில் தமது அராஜகத்தை  ஆவணப்படுத்துவதைத் தடுக்க அவர் மீது பாய்ந்து  அவரை தாக்கினார்கள்.

அதன் பின் எமது உறுப்பினரின் தொலைபேசியை பறித்தெடுத்தனர்.   இதையடுத்து எம்முடன் உரையாடிய சட்டத்தரணி சுகாஸை பலாலி பொலிஸ் பொறுப்பதிகாரி இனவெறியோடு மூர்க்கத்தனமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.இத்துடன் ஊடகவியளாளராக பணியாற்றியவரின் அடையாள அட்டையை கண்கானிதனத பின்னரும் அவரையும் கைது செய்தனர்.  இவர்களுடன் பொலிஸ் அனுமதியுடன் எனக்கு உணவு வழங்க வந்தவரையும் பலவந்தமாக கைது செய்ததுடன் யுத்தத்திலே ஒரு கையை இழந்த யுவதியையும்  ஈவிரக்கமின்றிக் கைது செய்தனர்.

உயர் பாதுகாப்பு வலய இராணுவ முகாமுக்குள்ள பலாலி பொலிஸ் நிலையத்தில்  மாற்றுடைகளோ மருந்துகளோ தண்ணீரோ வழங்காமல் மிக மோசமாக நடாத்தினர்.  அந்த பொலிஸ் பாறுப்பதிகாரிக்கெதிராக கொலை வழக்குகள் உட்பட 7 மனித உரமை மீறல் சம்பவங்கள்  உள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.  அவர் ஒரு  மன நலம் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகின்றது.

எமது உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது  இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டார்கள் அந்த வகையில் நேற்றைய தினமே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் இன்றைய  தினமே மருததுவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சட்டத்தரணி.காண்டீபனின் வாதத்திற்கேற்ப பொலிசாருக்கு கடுமையான எச்சரிக்கை நீதிமன்றால் விடுக்கப்பட்டதுடன் நீதிமன்ற கட்டளைக்கமைய போராட்டங்களை மேற்கொள்ள முடியும்  என கூறப்பட்டுள்ளதுடன் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக என்னைக் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டு பின் விட்டு விட்டனர். இதன் மூலம் போராட்டங்களை குழப்ப முயன்றனர். இவற்றை விட நேற்றைய தினம் பாதுகாப்பற்ற இடத்திலே தான் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எம்மைப் பொறுத்தவரை ஆகவே இந்த காணிகள்  உடனடியாக எம்மிடம் ஒப்படைக்கப்படும் வரையிலும் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்படும் வரையிலும் எவ் அச்சுறுத்தல்கள் வந்தாலும் தொடர்ச்சியாக போராடவுள்ளோம்.

எமக்கு நேர்மையான ஒரு தலைமை காணப்படுகின்றது. அந்த தலைமை நேர்மையாக  இலட்சியங்களை முன்கொண்டு வழிநடததிக்கொண்டிருக்கின்றது.

அந்த தலைமை எமது இனம் சந்திக்கின்ற பிரச்சனைகளை சர்வதேச இராஜதந்திர மட்டங்களுக்குக் கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்துகின்ற விடயங்களை முன்னெடுத்தவண்ணமுள்ளார்.

2009 வரை எங்களுக்கொரு தலைமை. அத் தலைமையின்  பின்னின்று குரவ் கொடுக்கத் தயாராக இருந்தோம்.போராட்டம் மௌனி்க்ப்பட்ட பின்  அரசியலியக்கத்தினுடைய தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய வழிகாட்டல் மக்களுக்குரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஓர்மத்தை ஏற்படுத்துகின்றது.

அந்த வகையில்  போராட்டம் நாளைய தினமும் தொடர்ச்சியாக  இடம்பெறவுள்ளதுடன் மக்கள் பெருமளவு திரண்டு வந்து ஆதரவளிக்க வேண்டும்.  என்றார்.

Leave a Reply