எமக்கு தீர்வு வழங்கப்பட்டாலே கற்றல் நடவடிக்கையை தொடருவோம்- இலங்கை ஆசிரியர் சங்கம்

83 Views

எமக்கு தீர்வு வழங்கப்பட்டாலே கற்றல் நடவடிக்கையை தொடருவோம்

எமக்கு தீர்வு வழங்கப்பட்டாலே கற்றல் நடவடிக்கையை தொடருவோம்- இலங்கை ஆசிரியர் சங்கம்: பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம், இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றைத் தணிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply