யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது, அவர்களுக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்



