சீனாவின் பட்டுப்பாதை விடயத்தில் நடுநிலை வெளிவிவகார கொள்கையை பின்பற்ற வேண்டும் – ரணில்

DSC8213JPG சீனாவின் பட்டுப்பாதை விடயத்தில் நடுநிலை வெளிவிவகார கொள்கையை பின்பற்ற வேண்டும் – ரணில்

சீனாவின் பட்டுப்பாதை விடயத்தில் நடுநிலை வெளிவிவகார கொள்கைகைய இலங்கை பின்பற்றவேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள பாதகமான விடயங்களை நிராகரித்து, அதில் உள்ள சிறந்த விடயங்களை  ஏற்றுக் கொள்ளவேண்டும்  எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடல் வழி, நில வழியிலான வர்த்தகப் போக்குவரத்தை பட்டுப்பாதை வழியாக நிகழ்த்துவதன் மூலம் தனது உலக ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்ள சீனா எண்ணுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பாதை தென்னாசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள்,  மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் என நூற்றுக் கணக்கான நாடுகள் சென்றடைய கூடியதாக உள்ளது. இது சீனாவின் இராணுவ நலன்கள் சார்ந்து அமைக்கப்படுவதாக எழும் விமர்சனங்களை மறுத்துள்ள சீன அரசு, இதனை தொழில் வர்த்தக உறவுகளை பெருக்குவதற்கான திட்டம் எனக் கூறுகிறது. ஆனால் இந்தப் பட்டுப்பாதை திட்டம், இந்தியாவின் நலனுக்கு எதிரானதாக இருக்கும் என இந்திய அரசு கருதும் அதே வேளை,  சில நாடுகள் எதிர்க்கவும் செய்கின்றன.

இந்நிலையில், இது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

அனைவரும் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவை பேண வேண்டும், நாங்கள் சீனா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் சிறந்த உறவை பேண வேண்டும். நாட்டிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான பொதுவான நீண்டகால கொள்கை கட்டமைப்பே அவசியம்; பொதுவான எதிர்கட்சி கூட்டணி அவசியமில்லை.

அரசமைப்பினால் பாதுகாக்கப்பட்ட பொதுவான கொள்கைகளே எங்களுக்கு அவசியம். சீனா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.   ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பது வேறு விடயம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உறுதியான கொள்கை கட்டமைப்பை உருவாக்குவது வேறு விடயம்.

பொதுவான கொள்கை திட்டம் குறித்த இணக்கப்பாடு எட்டப்படா விட்டால் ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதில் பயனில்லை. அவ்வாறான கொள்கை கட்டமைப்பு இல்லாததே நல்லாட்சி அரசாங்கம் தோல்வி யடைந்தமைக்கான முக்கிய காரணம்.

பாடசாலை மாணவர்களுக்கு  மடிக் கணனியினை வழங்கும் விடயத்தில் கூட நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தவர்களால் இணக்கப்பாட்டிற்கு வரமுடியவில்லை.  எனவே நீண்ட கால கொள்கை கட்டமைப்பே அவசியம்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021