மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாசம் – ஊடகவியலாளர் படுகாயம்

353 Views

IMG 20210725 WA0017 மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாசம் - ஊடகவியலாளர் படுகாயம்

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு தாக்கியதில் வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

குறித்த சம்பவம்  ஈச்சங்குளம் அம்மிவைத்தான் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நேற்று மாலை குறித்த பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் அப்பகுதியில் நின்ற பொது மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் கோபாலகிருஸ்ணன் ரூபகாந் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply