மன்னார் மாவட்டத்தில் 52,144 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது-மருத்துவர்  ரி.வினோதன்

IMG 20210726 093337 மன்னார் மாவட்டத்தில் 52,144 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது-மருத்துவர்  ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 144 பேருக்கு முதலாவது கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 57 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் குறைந்த பட்சம் கோவிட் 19 தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல்  பிரிவுகளின் தரவுகள் வெளிக் காட்டுகின்றன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளின்படி, மே12 அன்று இலங்கை கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் ஒரு மில்லியன் மைல் கல்லை எட்டியது, ஜூன் 8 அன்று 2 மில்லியன் மைல் கல்லை எட்டியது, ஜூலை 20 அன்று 6 மில்லியன் மைல் கல்லை எட்டியது மற்றும் ஜூலை 24 அன்று 7 மில்லியன் மைல் கல்லை எட்டியுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 144 பேருக்கு முதலாவது கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று  மருத்துவர்  ரி.வினோதன் ஊடக சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021