மாணவர் கோரிக்கையை ஏற்றார் துணைவேந்தர்- முடிவுக்கு வந்தது போராட்டம்

196 Views

மாணவர் கோரிக்கையை ஏற்றார் துணைவேந்தர்மாணவர் கோரிக்கையை ஏற்றார் துணைவேந்தர்: யாழ். பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாணவர் குழு தமது நடவடிக்கையை நேற்றிரவு கைவிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இறுதி ஆண்டு மாணவர்கள் சிலர் தலைமையில் மூன்றாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் இணைந்து பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் நேற்று காலைமுதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் அங்கீகரிக்க மறுப்பதாகத் தெரிவித்தே குறித்த நடவடிக்கை குறித்த மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

பல்கலைக்கழக பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட ஒருவரை மாணவர் ஒன்றியத் தலைவராக அங்கீகரிக்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே நீண்டகாலமாக மாணவர் ஒன்றியத் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளமையாலேயே புதிய தலைவரை பல்கலைக்கழக நிர்வாகத்தின் பங்களிப்பு இன்றி தெரிவு செய்திருப்பதாக பல்கலைக்கழகத்தினை முடக்கியுள்ள மாணவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார்.

யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு இன்றிரவு சென்று, இன்று காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply