தமிழரசு இளைஞர் அணி பிரமுகரை வெள்ளை வானில் கடத்த முயற்சி- கல்முனையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு

171 Views

வெள்ளை வானில் கடத்த முயற்சிஇலங்கை தமிழரசுக் கட்சி இளைஞர் பிரிவின் செயலாளர் நிதர்சனை வெள்ளை வானில் கடத்த முயற்சி ஒன்று நேற்றிரவு இடம் பெற்றிருப்பதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களே இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்த அவர், பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டையில் இளைஞர் அமைப்பின் செயலாளர் முன்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் தன்னுடைய ருவிட்டர் பதவிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

வெள்ளை வான் கடத்தல் முயற்சியின் போது நண்பர்களின் உதவியுடன் அவர் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply