வவுனியா: நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி

171 Views

நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி

வவுனியா வடக்கில் நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது.

வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால்  முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில்  அனைத்து மக்களும்  தடுப்பூசியினை பெற்றுவருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் நெடுங்கேணி, மருதோடைக்கிராமத்தில் வசிக்கும்  100 வயது  நிரம்பிய அன்னை ஒருவர்  கொரோனா தடுப்பூசி போட விரும்புவதாக கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்றையதினம் (11)  வழங்கப்பட்டது.

இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போடவேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்கு தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,வவுனியா மாவட்டத்தில் இம்மாதம்  11 ஆம் திகதி வரை 1651 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply