வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? மக்கள் கேள்வி

IMG 20210530 WA0037 வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? மக்கள் கேள்வி
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப் படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தி யுள்ளனர். 
வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப் படும் நிலையில், அண்மையில் 1000 தடுப்பூசிகள் சில வைத்தியர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் சுகாதார துறையினர், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என குறைந்தளவி லானோருக்கே வவுனியாவில் தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனையோருக்கு தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்தும் கால தாமதம் நிலவி வருவதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதே வேளை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையில் கொழும்பு போன்ற பகுதிகளில் 97 வீதமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது.
எனினும் வவுனியாவில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்பட வில்லை. வவுனியா ஆசிரியர்கள் ஓரம் கட்டப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ள தாகவும் மக்கள் குற்றம் சாட்டும் அதேவேளை, இவ்வாறான விடயங்களுக்கு வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் எவரும் பதில் வழங்காமை சந்தேகத்தை எழுப்பு வதாகவும் தெரிவிக்கின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தல்கள் வழங்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் எவரும் கருத்துக் கூறாமை ஏன் என்ற கேள்வியை எழுப்பு வதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே கொரோனா தடுப்பூசிகளை பெற சுகாதார தரப்பினர் தகவல்களை வழங்குவது மாத்திரமன்றி வவுனியா மாவட்டத்திற்கு தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கொரோனா தடுப்பு செயலணிக்கு விரிவாக எடுத்துக் கூறி காரியத்தை சாதிக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன் வாய் மூடி மெளனியாக இருப்பதால் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது எனவும் மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 வவுனியாவுக்கு தடுப்பூசி தாமதமாவது ஏன்? மக்கள் கேள்வி

Leave a Reply