கானல் நீராகும் மலையக அபிவிருத்தி 1 – துரைசாமி நடராஜா
சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும். இந்த வகையில் மலையக இளைஞர்களின் வகிபாகம் குறித்து நாம் அதிக மாகவே சிந்திக்க வேண்டி யுள்ளது. தொழிலின்மை போன்ற காரணங்கள் இளைஞர்களின் நகர்ப் புறம் நோக்கிய நகர்வை துரிதப் படுத்தியுள்ள நிலையில், மலையகம் சார்ந்த இளைஞர்கள் பங்களிப்பு கேள்விக் குறியாகி இருக்கின்றது. அத்தோடு இளைஞர் களைப் புறந் தள்ளும் நிலைமைகள் அவர் களிடையே ஒரு அதிருப்தியினை ஏற்படுத்தி வருவதாகவும் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இளைஞர் சக்தியின் வல்லமை மிகவும் அதிகமாகும். பல உலக நாடுகள் இளைஞர் சக்தியை மையப்படுத்தி, மேலெழும்பிய வெளிப் பாடுகளுக்கு அத்திவாரம் இட்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது, அந்நாடுகள் பல துறைகளிலும் முன்னேறு வதற்குத் தோள் கொடுத்திருக்கின்றன. பல உலகத் தலைவர்களின் அல்லது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் வெற்றியின் பின்னணியில் இளைஞர்களின் ஆக்க பூர்வமான வகிபாகம் உந்து சக்தியாக இருந்திருக்கின்றது. இந்தியாவில் பிரதமர் மோடியின் வெற்றியை நிர்ணயித்த பல்வேறு காரணிகளுள் இளைஞர் சக்தியின் ஆதிக்கம் உச்ச நிலையில் இருந்ததாக கருத்துக்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்த வகையில், இளைஞர்களுக்கு தோள் கொடுப்பவர்களுக்கு அவர்கள் கை கொடுக்கக் காத்திருக்கின்றார்கள். இது நிகழாத நிலையில், இளைஞர் புறக்கணிப்பு அதிகப்படுமாயின், இதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமையக் கூடும் என்ற எதிர்வு கூறல்களுக்கும் குறை விருப்பதாகத் தெரிய வில்லை.
மலையக நிலைமைகள்



இளைஞர்களின் சக்தி அல்லது ஆளுமை குறித்து நாம் பேசுகின்ற போது, எமது கண் முன்னே மலையக இளைஞர்கள் நிழலாடு கின்றனர். இவ்விளைஞர்கள் பல்வேறு திறமை களும் கைவரப் பெற்றவர்களாக இருந்த போதும், இந்தத் திறமைகளை சமூகம் எந்தளவு க்குப் பயன் படுத்திக் கொள்கின்றது?
இளைஞர்களின் முன்மாதிரியான கருத்துக் களுக்கு எந்தளவுக்கு அங்கீகாரத்தை வழங்குகின்றது என்பதெல்லாம் கேள்விக் குறியான விடயங்களே ஆகும். தேவையான போது இளைஞர்களை தூக்கி உச்சந் தலையில் வைத்துக் கொண்டாடும் பச்சோந்திகள், தேவை முடிந்ததும் அவர்களைத் தூக்கித் தூர எறிந்து விடுவதாக மிகப் பெரும் குற்றச் சாட்டு ஒன்று இருந்து வருகின்றது. குறிப்பாக இதற்கென அரசியல் வாதிகளை பெரும் பாலும் உதாரணம் காட்டும் மரபும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. தேர்தலில் மேடை போடுவதில் இருந்து வெற்றியின் பின் தோளில் சுமப்பது வரை இளைஞர்களாக இருந்த போதும், இளைஞர்களுக்கென ஆனபயன் எதுவுமில்லை. இந்த வரலாறுகள் இன்னு மின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
தேர்தலில் மேடை போடுவதில் இருந்து வெற்றியின் பின் தோளில் சுமப்பது வரை இளைஞர்களாக இருந்த போதும், இளைஞர்களுக்கென ஆனபயன் எதுவுமில்லை. இந்த வரலாறுகள் இன்னு மின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதனால் தோட்டங்களில் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் இவர்களின் உள்ளார்ந்த நிலை, ஈடுபாடு என்பன அதிகமாகக் காணப்பட்டது. எனினும் இதில் சம காலத்தில் சறுக்கல் நிலை ஏற்பட்டிருப் பதனையும் நாம் கூறியாக வேண்டும். மலையக இளைஞர்கள் தோட்டத் தொழிற் துறையில் ஆக்கிரமித்திருந்த தொழில் வாய்ப்புக்களை தற்போது பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆக்கிரமித் துள்ளனர். இனவாத முன்னெடுப்புக்கள் தோட்டத் துறையிலும் உள் நுழைந்துள்ள நிலையில், இந்நிலை தோட்ட இளைஞர்களுக்கு சாட்டையடியைக் கொடுத்திருக்கின்றது. தொழிற் துறைகளில் அவர்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
மலையகப் பகுதிகளில் தற்போது படித்த இளைஞர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. இது வரவேற்கத் தக்கதொரு விடயமாகும். எனினும் பெரும் பாலும் உயர் கல்வியில் காலடி வைக்காத நிலையில் பல இளைஞர்கள் க.பொ.த. சாதாரண தரத்துடன் தமது கல்வியினை நிறைவு செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தோட்டத் தொழிற் துறையில் அல்லது மலையகப் பகுதிகளில் உரிய தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் தொழில் நிமித்தம் நகர்ப்புற நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இளைஞர்களின் வெளிச் செல்லுகை நிலை அதிகரித்து வருகின்றது. இந்தப் போக்கு, தோட்டப் புறச் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட முடியாத ஒரு நிலைக்கு உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நிலையில், தோட்டத் துறைக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான தொடர்பும் இதனால் அறுந்து போயுள்ளது.
இதனால் இளைஞர்களின் பங்களிப்புடன் கூடிய அபிவிருத்தி அல்லது செயற் பாடுகள் முடக்கல் நிலையினை அடைந்திருக்கின்றன. தோட்டத் துறையில் அல்லது சமூகத்தில் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கு பற்ற முடியாத ஒரு நிலை ஏற்படுகின்றது. இது மலையக சமூகத்தைப் பொறுத்த வரையில் ஒரு பின்னடைவே ஆகும்.
தொழிற் பயிற்சி நிலையங்கள்
இவ்வாறு தொழிற் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இளைஞர்கள் தொழில் வாய்ப்பு குறித்த பயிற்சியினைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படு கின்றது. மேலும் சிறந்த தொழில் வாய்ப்பினை இளைஞர்கள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதனால் பொருளாதார சுமைகளுக்குத் தீர்வு எட்டப் படுகின்றது. இவற்றுக் கெல்லாம் மேலாக தொழில் நிமித்தமான இளைஞர் வெளிச் செல்லுகை தடைப் படுவதோடு, சமூகச் செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கின்றது. இதன் மூலமாக கலாசார உறுதிப் படுத்தல், இனவாத முறியடிப்பு, தீர்மான மேற் கொள்ளலில் பங்கேற்பு உள்ளிட்ட பல சாதக விளைவுகளும் ஏற்படு கின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
இதேவேளை இளைஞர்களின் அபிவிருத்தி கருதி முன்வைக்கப்பட வேண்டிய பயிற்சித் திட்டங்கள் தொடர்பாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர் மு.சின்னத்தம்பி ஆகியோர் சில கருப்பொருட்களை முன்வைத்துள்ளனர். அறிவு சார்ந்த பயிற்சித் திட்டங்கள், மைய வினைத்திறன் அபிவிருத்திப் பயிற்சித் திட்டங்கள், தொழில்சார் பயிற்சித் திட்டங்கள், முயற்சி யாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்கள், தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடிய பயிற்சித் திட்டங்கள், ஆளுமை அபிவிருத்திப் பயிற்சித் திட்டங்கள் எனப் பலவும் இதில் உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இளைஞர்களின் தொழில் மேலாண்மை அல்லது வருமான மூலங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய திட்டங்கள் தோட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப் படுதல் அவசியமாகும். தோட்டங்களுக்கு உள்ளேயே வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அறிமுகப் படுத்தப் படுதல் வேண்டும். தோட்டப் புறங்களில் 35000 ஹெக்டெயருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் காணப் படுகின்றன. இந்த நிலங்கள் விவசாய நடவடிக்கைகளை விரிவு படுத்தும் நோக்கில் இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் நீண்ட காலமாகவே முன்வைக்கப் பட்டு வருகின்றன. எனினும் இந்நிலைமையில் முன்னேற்ற கரமான போக்குகள் எவையும் உரியவாறு தென்பட வில்லை.
இழுபறியான நிலைமைகளே இருந்து வருகின்றன. தரிசு நிலங்களை இளைஞர் களுக்கு வழங்கு மிடத்து, அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்ற விபரீதமான சிந்தனைகளின் காரணமாகவே தோட்ட நிர்வாகங்கள் நிலப் பகிர்வை தாமதப்படுத்தி வருகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கை களுக்கு வலு சேர்ப்பதால், இளைஞர்களின் வெளிச் செல்லு கைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
“பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்”
சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்
இருபத்து ஆறு ஆண்டுகள் கடந்தும், நீதி கிடைக்காத இனப்படுகொலை