உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், சிறு வாக்கு வித்தியாசத்திலேயே டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ வெற்றியைத் தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 186 மில்லியனுக்கும் அதிகமாகும்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் இரு முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் திகதியே அமெரிக்க அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நடைபெறும்.