இஸ்ரேல் மூலம் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் விடுத்ததாகக் கூறப்படும் கொலை மிரட்டல் குறித்தும், அதன் காரணமாகவே அவரை துருக்கியிலிருந்து ஒரு மாற்று இராணுவ விமானத்தில் இரகசியமாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்ததாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்த தகவலை இஸ்ரேலிய அரசாங்கம் சிஐஏ-விடம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த அமைப்பின் ஆய்வாளர்கள் அந்த உளவுத் தகவலை நம்பத்தகுந்ததாகக் கருதவில்லை என்றும், தங்கள் ஐயங்களை நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ட்ரம்ப்பின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகள் அமெரிக்க அமைப்புகளை விட இஸ்ரேலிய ஆதாரங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன என்றும், சில ஆய்வாளர்கள் அவற்றின் நம்பகத்தன்மை குறைவு எனக் கருதுவதாகவும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி கூறுகிறது.
கடந்த மாதம் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, துருக்கியின் அங்காராவில் உள்ள விமான ஓடுபாதையில் இரகசியமாக விமானத்தை மாற்றியதை செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். பாதுகாப்புப் பணியாளர்களின் வழிகாட்டுதலை மட்டுமே தான் பின்பற்றியதாகவும் அவர் கூறினார்.



