407 Views
பல்கலைக் கழகத்திற்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்
யாழ்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட் அனுசரணையுடன், யாழ். பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தரும், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன் போது, பல்கலைக் கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.