உக்ரைனில் அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது- ரஸ்யா

462 Views

உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது

அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களை தயாரித்தது

உக்ரைன் அரசுடன் இணைந்து உக்ரைனில் அமெரிக்கா  உயிரியல் ஆயுதங்களை தயாரித்துள்ளதற்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் மரியா சகோராவா கடந்த புதன்கிழமை (9) தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள ரஸ்யாவின் எல்லையில் அமெரிக்கா எந்த வகையான உயிரியல் ஆயுதங்களை தயாரித்துள்ளது என்பதை எமக்கு விளக்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமே இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அவர்களின் ஆய்வுகூடத்தில் பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்திரக்ஸ் மற்றும் பிளேக் போன்ற நோய்களை பரப்பும் கிருமிகளை தயாரிக்கும் ஆவணங்களும் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

மேற்குலக்தின் தடைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது ரஸ்யா தனது நலன்களை பாதுகாக்கும் எனவும்இ உக்ரைன் போரை நிறுத்துவதற்கான தமது கோரிக்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply