உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் – ஐ.நா

474 Views

2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்

உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்

கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களை தொடர்ந்து 2.5 மில்லியன் மக்கள் அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லைகளில் உள்ளவர்களுக்கு நாம் உதவிகளை வழங்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இல்லாத மோல்டோவா கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது என ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் ரஸ்யா அறிவித்த போர்நிறுத்தங்களின் போது பெருமளவான உக்ரேன் மக்களும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் வெளியேறியிருந்தனர். சுமி பகுதியில் இருந்து 600 இற்கு மேற்பட்ட இந்திய மாணவர்களும் வெளியேறி பொல்ராவா பகுதிக்கு சென்றிருந்தனர்.

எதிர்வரும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 4 மில்லியனாக அதிகரிக்கலாம் என மேற்குலக நாடுகள் எச்சரித்துள்ளன. அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துவரும் நிலையில் அவர்களை பராமரிப்பது தொடர்பில் மேற்குலக நாடுகளிடம் சச்சரவுகள் ஆரம்பித்துள்ளன.

Leave a Reply