இந்தியாவின் இனஅழிப்பை தடுக்க ஐ.நா பாதுகாப்புச்சபை முன்வர வேண்டும் – மென்டெஸ்

ஐ.நா பாதுகாப்புச்சபை முன்வர வேண்டும்

இந்தியாவின் இன அழிப்பில் இருந்து அங்கு வாழும் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்தற்கு ஐக்கிய ஐ.நா பாதுகாப்புச்சபை முன்வர வேண்டும் என ஐ.நாவின் இன அழிப்புக்கு எதிரான முன்னாள் சிறப்பு பிரதிநிதி யுவான் ஈ மென்டெஸ் தெரிவித்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட இந்துக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த மாதம் ஹரிட்வார் பிரதேசத்தில் ஒன்றுகூடி முஸ்லீம்களை அழிப்பதற்கு அணி திரளுமாறு அறைகூவல் விடுத்துள்ளனர். இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத் தளங்களில் பரவி வருகின்றன.

இந்தியாவில் இனஅழிப்பு மிகவும் மேசமாக நிகழப்போகின்றது என தெரிவித்துள்ளார் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பேராசிரியர் கிரெகரி ஸ்ரன்டன், இவர் தான் இனஅழிப்புக்களை கண்காணிப்பது தொடர்பான அமைப்பை உருவாக்கியவர். இனஅழிப்பின் 10 படிமுறைகளில் இந்தியா 8 ஆவது இடத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

8 ஆவது படிமுறை என்பது ஒரு இனத்தின் உரிமைகளை மறுத்து அடக்குமுறைக்குள் வைத்திருத்தலாகும். இறுதி இரண்டும் இனப்படுகொலையை மேற்கொள்வதும் அதனை மறுப்பதுமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர், ஆனால் தற்போது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே அங்கு ஒரு இனப்படுகொலை நிகழ்வதற்கு முன்னர் ஐ.நா அல்லது அனைத்துலக சமூகம் அதனைத் தடுக்க முன்வரவேண்டும் என மென்டெஸ் தெரிவித்துள்ளார்.

Tamil News