கொரோனோ வைரஸ் மீண்டும் மீண்டும் வரும் – பேராசிரியர் சைமன் கிளார்க்

கொரோனோ வைரஸ் மீண்டும் மீண்டும் வரும்

கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளை பல நாடுகள் நீக்கிவரும் நிலையில், கொரோனோ வைரஸ் மீண்டும் மீண்டும் வரும் என எச்சரித்துள்ளார் பிரித்தானியாவின் ரெடிங் பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சைமன் கிளார்க்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விரைவிலோ அல்லது தாமதமாகவோ வைரஸ் மீண்டும் மக்களை தாக்கலாம். புதிய வைரஸ் அதிக தாக்கம் உள்ளதாகவோ அல்லது வீரியம் குறைந்ததாகவோ இருக்கலாம். இது யாரையும் தாக்கலாம், முன்னர் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் மீண்டும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் எப்போதும் வீரியம் குறைந்ததாக இருப்பதில்லை, சில சமயங்களில் அதிக தொற்றும் தகைமையுடையதாகவும், மனிதர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

இது ஒருவழிப் பாதையல்ல ஏற்றமும், இறக்கமும் இருக்கும். இன்னுமொரு பிறழ்வடைந்த வைரஸ் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

தடுப்பூசிகள் மூலம் ஒமிக்ரோன் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்களில் தடுப்பூசிகளின் தடுப்புத் தன்மை குறையும்போது ஒமிக்ரோனின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே நான்காவது தடுப்பூசி அவசியமானது என தெரிவித்துள்ளார்.

Tamil News