இலங்கையின் அந்நியக் கையிருப்பு மீண்டும் வீழ்ந்தது

இலங்கையின் அந்நியக் கையிருப்பு மீண்டும்

இலங்கையின் அந்நியக் கையிருப்பு மீண்டும் 2.36 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 3.14 பில்லியன் டொலர்களாக இருந்த இந்த தொகை இறக்குமதி மற்றும் மீளச் செலுத்தும் கடன் தொகைகளை செலுத்தியதால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா 400 மில்லியன் டொலர்களை பணப்பரிமாற்றமாகவும், 500 மில்லியன் டொலர்களை கடனாகவும் வழங்கியிருந்த போதும், இலங்கையின் நிதி நிலைமை வீழ்ச்சிகண்டு வருகின்றது. இந்தியாவிடம் இருந்து மேலும் 1 பில்லியன் டொலரை இலங்கை எதிர்பார்த்து நிற்பதுடன், யப்பான், பகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளை கோரியுள்ளது.

அனைத்துலக விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால், அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்து நிராகரித்துவரும் இலங்கை அரசு, எதிர்வரும் சிங்களப் புத்தாண்டை கொண்டாடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரியுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதத்திற்கு முன்னர் 1.83 பில்லியன் டொலர்களும், டிசம்பர் மாதத்திற்கு முன்னர் 2.9 பில்லியன் டொலர்களும் இலங்கை அரசு கடன் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News