மரியப்போலில் சிக்கியுள்ளவர்களை மீட்க வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்

வெளிநாட்டு உதவி கோருகின்றது உக்ரைன்

மரியப்போல் மீதான முற்றுகை முடிவுக்கு வந்துள்ளதாகவும், முற்று முழுதாக அங்த பகுதியை கைப்பற்றிய ரஸ்யா தலைமையிலான டொனஸ்ற் குடியரசுப் படையினர் உக்ரைன் படையினரை ஒரு சிறு பகுதிக்குள் முடக்கியுள்ளதாகவும் ரஸ்யா கடந்த வியாழக்கிழமை (21) தெரிவித்துள்ளது.

முற்றுகை கடந்த மாதம் ஆரம்பித்த போது உக்ரைன் படையினர் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர் என 8100 பேர் முற்றுகைக்குள் சிக்கியிருந்ததாகவும், அவர்களில் 1478 பேர் இதுவரை சரணடைந்துள்ளதாகவும், 2000 பேர் ஒரு சிறு பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

முற்றுகைக்குள் சிக்கியவர்கள் மீது ரஸ்ய படையினர் தாக்குதல் நடத்தும் திட்டத்தை வகுத்தபோதும், இறுதி நேரத்தில் பூட்டின் அதனை தடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் மேற்கொள்வதை தடுத்த பூட்டீன், முற்றுகைக்குள் உள்ளவர்கள் வெளியேறாதவாறு தடுப்பு அரண்களை அமைக்குமாறும், அவர்களுக்கு சரணடைய மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிநாடுகள் உதவி மேற்கொண்டால் தாம் அவர்களை மீட்க முடியும் என உக்ரைன் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு கிரைமியா பகுதி மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கையின் பின்னர் உக்ரைனும், நேட்டோ கூட்டமைப்பும் இணைந்து அசோவ் படையணி எனப்படும் சிறப்பு படையணியை உருவாக்கி மரியப்போல் பகுதியில் நிலைகொள்ள வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News