365 Views
அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் திருகோணமலை ஹொரப்பத்தானை திரியாய் சந்தியில் மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாளாந்த கூலித் தொழில் மூலமாக பிள்ளைகளுடன் வாழ்வது எப்படி எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொருட்களின் விலையேற்றம் எம்மை மாத்திரமல்ல எம் பிள்ளைகளையும் பாதித்துள்ளது. பால் மாவின் அதிக விலை ஆகாயத்தை தொடுகிறது. இதனை நிறுத்த வேண்டும். இந்த அரசாங்கம் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.