ரஸ்யா பரிசோதித்த மிக நவீன ஏவுகணை – தடுப்பதற்கு ஆயுதமில்லை

ரஸ்யா பரிசோதித்த மிக நவீன ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் சார்மாட்-ஆர்.எஸ்-28 எனப்படும் ஏவுகணையை ரஸ்யா கடந்த புதன்கிழமை (20) பரிசோதித்துள்ளது.

11,200 மைல்கள் தொலைவில் உள்ள இலக்குகளை மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட குண்டுகளை கொண்டு தாக்கும் இந்த ஏவுகணையே உலகின் முதன்மையான நீண்ட தூர ஏவுகணை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பரிசோதனையானது ரஸ்ய படையினருக்கு கிடைத்த வெற்றி என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின்  பிளசெற்ஸ்க் கொஸ்மொறோம் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 3600 மைல்களுக்கு அப்பால் உள்ள கம்சற்கா தீவில் உள்ள இலக்கை தாக்கியுள்ளது.

இந்த ஏவுகணையின் முதலாவது பரிசோதனை 2017 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டிருந்தது. 16,000 மைல்களை ஒரு மணிநேரத்தில் கடந்து செல்லும் இந்த ஏவுகணை உலகில் உள்ள எல்லா ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் முறியடித்து பயணிக்கும் தன்மை கொண்டது. இதனை தடுப்பது என்பது இயலாதது என பிரித்தானியாவின் படைத்துறை சிந்தனைப் பள்ளி தெரிவித்துள்ளது.

பத்துக்கு மேற்பட்ட அணுவாயுதங்களை சுமந்து செல்லும் இந்த வகையான ஒரு ஏவுகணை மூலம் பிரான்ஸ் போன்ற பெரிய நாட்டை ஒரு தாக்குதலில் அழித்துவிட முடியும் எனவும், ஒரு ஏவுகணை பல மில்லியன் மக்களை கொல்லும் தகமை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply