பலஸ்தீன – இஸ்ரேல் மோதல் தீவிரமடைகின்றது

இஸ்ரேல் மோதல் தீவிரமடைகின்றது

கடந்த வியாழக்கிழமை (21) இஸ்ரேல் வான்படையின் விமானங்கள் காசா பகுதியில் தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து பலஸ்தீன ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது உந்துகணைகளை அதிகளவில் ஏவியதால் அங்கு மோதல்கள் வலுப்பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற 11 நாள் போருக்கு பின்னர் இடம்பெற்றுள்ள மிகவும் தீவிரமான மோதல் இதுவாகும். கடந்த புதன்கிழமை (20) ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் வீழ்ந்து வெடித்தபோதும் யாரும் பாதிக்கப்படவில்லை.

ஹமாஸ் அமைப்பின் தளங்கள் மீது வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் விமானங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுயள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதல் இடம்பெற்றுவரும் சிறு சிறு மோதல்களில் 14 இஸ்ரேலியர்களும், 23 பலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News