பூச்சிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி

காலநிலை மாற்றம் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்ப முறைகள் காரணமாக பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர்.

பூச்சி இனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் குடித்தொகை ஆகிய இரண்டையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்திருந்தனர்.

சாதாரண இடங்களை விட அதிக வெப்பநிலையுள்ள இடங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு விவசாயம் செய்யும் இடங்களில் உள்ள பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் அதிக வீழ்ச்சி காணப்படுகின்றது.

பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் 27 விகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேனீக்கள், வண்ணாத்துபூச்சிகள் உட்பட 18,000 இற்கு மேற்பட்ட இனங்களை கொண்ட பூச்சி வகைகளில் 750000 இற்கு மேற்பட்ட தகவல்களை திரட்டி 1992 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலும் 6000 இற்கு மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Tamil News