உக்ரைன் மக்கள் வறுமையில் வாடும் நிலைவரும் – ஐ.நா

உக்ரைன் மக்கள் வறுமையில் வாடும் நிலைவரும்

உக்ரைன் மக்கள் வறுமையில் வாடும் நிலைவரும்

தற்போது இடம்பெறும் போரானது அடுத்த வருடம் வரை நீடித்தால் உக்ரைனில் வாழும் மக்களில் 90 விகிதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் செல்லும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த போர் அவர்களின் 20 வருட பொருளாதார வளர்ச்சியை சீரழித்துவிடும். அங்கு பெருமளவான மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடலாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போது இடம்பெறும் போரினால் உக்ரைனின் பொருளாதாரம் அரை றில்லியன் டொலர்கள் பெறுமதியான அழிவைச் சந்தித்துள்ளதாக ரஸ்யாவின் நிதி அமைச்சர் செர்கி மார்சென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் உற்பத்தித்துறை, விநியோகத்துறை உட்பட பெருளமவான வியாபாரத்துறைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியேறியதே அதற்கான முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து கடந்த வியாழக்கிழமை (17) வரையிலும் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.