மக்களின் எதிர்ப்பையடுத்து நல்லூரை தவிர்த்து மாவிட்டபுர கந்தனை வழிபட்ட மஹிந்த

மாவிட்டபுர கந்தனை வழிபட்ட மஹிந்த

மாவிட்டபுர கந்தனை வழிபட்ட மஹிந்த

மக்களின் எதிர்ப்பு காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து இன்று காலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார்

நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நல்லூருக்காண விஜயத்தை இரத்து செய்து  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் மகிந்த வழிபாட்டில் ஈடுபட்டார்.