இலங்கை : கோட்டா அரசை கவிழ்க்க சர்வகட்சி இடைக்கால அரசு உள்ளிட்ட இரு நிபந்தனை முன்வைப்பு

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை கவிழ்க்க கொண்டு வரப்பட இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென்றால், சர்வகட்சி இடைக்கால அரசு அமைக்க ஆதரவளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இரண்டு நிபந்தனைகளை 11 சுயாதீனக் கட்சிகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. ஊடகங்களிடம் கூறியதாவது:-

கோட்டாபய அரசுக்கு ஆதரவாக தற்போது 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் அது தோல்வி அடையும். அதன்மூலம் அரசு பலமடையும். எனவே, 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக சர்வகட்சி இடைக்கால அரசமைக்க ஆதரவு வழங்க வேண்டும். இவ்விரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால், பிரேரணையை ஆதரிக்க நாம் தயார் என்றார்.

Tamil News