மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.