இலங்கை-மே தினக் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (மே1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களை முன்னிட்டு  காவல்துறை தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500  காவல்துறயினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை  பேச்சாளர் சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.