நாகர்கோவில் படுகொலை நினைவு நாள் இன்று

535 Views

012 2 நாகர்கோவில் படுகொலை நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகின்றது.

சிறீலங்கா தாக்குதல் விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் அஞ்சி ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை, குறித்த மரத்தின்மீதே இலக்கு வைக்கப்பட்டு விமானம் நடத்திய தாக்குதலில்  அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply