திருகோணமலை – மூதூர் வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

362 Views

மூதூர் வைத்தியசாலை

திருகோணமலை மூதூர் வைத்தியசாலையில்  கோரிக்கைப் பதாதைகள் தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்று தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 

கோவிட் -19 நிலையங்களில் கடமை புரியும் ஊழியர்களின் அடிப்படை தேவைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடு, கோவிட் -19 தொற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை வழங்கு, சுகாதார அமைச்சே கொவிட் -19 தடுப்புச் செயற்திட்டத்திற்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்வாங்கு, சுகாதார ஊழியர்களுக்கான 7500 ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்கு, கோவிட் -19 நிலையங்களில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்கு, சுகாதார ஊழியர்களுக்கு N-95 Mask பெற்றுத்தா, N-95 முகக்கவசம் பாதுகாப்பான உடை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கு, சுகாதார சேவையை மூடிய சேவையாக மாற்று போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை தாதியர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply