ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டை அமெரிக்க கூட்டுப்படையினர் தங்கள் வசம் மீட்டுள்ள அதே நேரம் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
முன்னதாக, இன்று காலையில் காபூல் விமான நிலையத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் நோக்கத்துடன் மக்கள் கூட்டம், விமானங்கள் மீதும் பேருந்துகளிலும் முண்டியடித்து ஏற முயற்சித்ததால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும், பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அங்கு அமைதி திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.
Another Saigon moment: chaotic scenes at Kabul International Airport. No security. None. pic.twitter.com/6BuXqBTHWk
— Saad Mohseni (@saadmohseni) August 15, 2021
இந்த நிலையில், காபூல் சர்வதேச விமான நிலைய வளாகம், ஓடுதளம் ஆகியவற்றின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்க படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறை அமெரிக்கா மற்றும் கூட்டுப்படை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே பயணிகள் விமான சேவை மறு உத்தரவு வரும்வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.